சூளை பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்(44). தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் வெளியில் கிளம்பிய அவர், மழைநீரில் கால் வைப்பதைத் தவிர்ப்பதற்காக சுற்றுச் சுவர் மேல் ஏறி வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அருகிலிருந்த இரும்பு கேட்டை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
தகவல் அறிந்த வேப்பேரி போலீஸாருக்கு அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேப்பேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.