Regional02

நெல் கொள்முதல் நிலுவையை தாமதமின்றி வழங்க வேண்டும் : ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கான நிலுவைத் தொகை ரூ.7 கோடியை தாமத மின்றி வழங்க வேண்டும் என்று ஆர்பி.உதயகுமார் எம்எல்ஏ வலி யுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் மதுரை ஆட்சியர் அனீஷ் சேகருக்கு எழுதிய கடிதம்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை கிடைக்க தாமதமாகிறது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7 கோடியை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்புகளை இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் தகுதி உள்ளவர்களுக்கு பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT