Regional01

இருசக்கர வாகனம் மோதியதில் எஸ்.ஐ படுகாயம் :

செய்திப்பிரிவு

திருச்சி உறையூர் காவல் நிலை யத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் கோப்பெருஞ் சோழன்(56). இவர், ரங்கத் திலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கோப்பெருஞ்சோழன் நேற்று முன்தினம் பணிமுடித்துவிட்டு இரவு 11.45 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார். சிந்தாமணி காவிரி பாலத்துக்கு அருகில் சென்றபோது, அவ் வழியாக வேகமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கோப்பெருஞ்சோழனின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில், தூக்கி வீசப்பட்ட கோப்பெருஞ் சோழ னுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக் கத்தினர் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT