கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் தனது 6.5 பவுன் நகையை தவற விட்டார். இதுகுறித்து வள்ளியூர் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். காணாமல் போன நகையை ஒன்றரை மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்து, ஐயப்பனிடம் ஒப்படைத்தனர்.