Regional01

கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுதலைப் போரில் தமிழகம் என்கிற தலைப்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் தங் களின் படைப்புகளை அனுப்பி இருந்தனர்.

அவற்றுள் சிறந்த படைப்புகளை அனுப்பிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். கலை ஆசிரியர் சொர்ணம் நன்றி கூறினார்.

போட்டியில் வைகுண்டம்  குமரகுருபரர் கலைக் கல்லூரி மாணவி காயத்ரி, ராணி அண்ணா கலைக் கல்லூரியைச் சேர்ந்த குட்டி, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் அண்ணாமலை ஆகியோர் வெற்றி பெற்றனர். சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி பழனி பிரியா, ஆய்க்குடி ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி திவ்யா, ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவி பேச்சியம்மாள், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவி ஜோஸ்னா, சூரங்குடி கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி முத்துலெட்சுமி ஆகியோருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT