ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று நடைபெற்ற 12-வது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்துவது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 695 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அணைக்கட்டு வட்டம் கந்தனேரி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம்