TNadu

தமிழகத்தில் புதிதாக 740 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று 442 ஆண்கள், 298 பெண்கள் என புதிதாக 740பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 112, சென்னையில் 105 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 8,382 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 454 ஆகஉயர்ந்துள்ளது என்று தமிழகசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஓமைக்ரான் வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT