Regional01

இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஆயுதப்படை காவலர் கைது :

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவருக்கும் சென்னை மாநகரில் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நேசமணி (31) என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுமார் 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதை அறிந்த காவலர் நேசமணி என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டாய். எனவே இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும், காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை நேசமணி சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண், பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸார் நேசமணி மீது பெண் வன்கொடுமை மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் காவலர் நேசமணியை கைது செய்த போலீஸார், பெருந்துறை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT