நாமக்கல் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் புதிய குடிநீர் திட்டப்பணிகள் குறித்து எம்எல்ஏ பெ. ராமலிங்கம் பார்வையிட்டார். அருகில் நகராட்சி ஆணையர் எம்.பொன்னம்பலம். 
Regional01

தடையின்றி குடிநீர் விநியோகிக்க நாமக்கல் நகராட்சியில் ஆலோசனை :

செய்திப்பிரிவு

நாமக்கல்லில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் எம்.பொன்னம்பலம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் பங்கேற்று நகராட்சியில் மேற்கொள்ளப்படும் புதிய குடிநீ்ர் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அந்தப் பணிகளை விரைந்து முடித்து நகராட்சியில் தடையின்றி சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் மதியழகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் சங்கரன், வரதராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT