Regional02

மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரு இளைஞர்கள் மாயம் :

செய்திப்பிரிவு

கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் பாலாஜி(20). இவர் கடலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துவேல் மகன் அபினேஷ்(17). இவர் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

நேற்று மதியம் நண்பர்கள் இருவரும் ஊருக்கு அருகே உள்ள நாராயணபுரம் பகுதியில் உள்ள மலட்டாறுக்கு சென்று குளித்தனர். அப்போது அவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். முடியவில்லை. இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸார் மற்றும் கடலூர் தீயணைப்புதுறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மலட்டாற்றில் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT