மல்லாங்கிணறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு. 
Regional01

இலங்கை தமிழர் 1,002 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார் :

செய்திப்பிரிவு

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு இலவச எரிவாயு இணைப்புக்கான உத்தரவு, ஆடைகள், சமையல் பாத்திரங்கள், மகளிர் சுய உதவிக் குழு கடன் உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

மாவட்டத்தில் மொட்டமலை, ஆனைக்குட்டம், அனுப்பங்குளம், செவலூர், கண்டியாபுரம், குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,002 குடும்பத்தினருக்கு ரூ.64.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT