Regional01

மதுரை மாநகரில் : சாலையோர கடைகளை அகற்ற சிஐடியூ எதிர்ப்பு :

செய்திப்பிரிவு

மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகருக்கு, சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரா.தெய்வராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவு எனக் கூறி, சாலையோர சிறுகடை களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சாலையோர சிறு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீர்வழித் தடங்கள், கண்மாய் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்குட்படாத இடங்களில் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி வருகிறது, இதனால் சாலையோரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT