மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருந்தாளுநர்கள். 
Regional02

கரோனா ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி - மதுரையில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும், 1,200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தாளுநர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்ற அரசாணையை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும், 42 துணை இயக்குநர் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்குகளை உடனடியாக அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மருந் தாளுநர்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT