Regional01

கரூரில் 2 பெண்களிடம் நகை, பணம் திருட்டு :

செய்திப்பிரிவு

ரங்கம் அருகேயுள்ள மேலூரைச் சேர்ந்த மதிவாணன் மனைவி ராஜேஸ்வரி(37). அண்மையில் கரூர் வந்திருந்த இவர், கரூர் வேலுசாமிபுரத்தில் இருந்து கரூர் பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் சென்றார். பேருந்து நிலையத்தில் இறங்கி பார்த்தபோது, தனது கைப்பையில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: கரூர் மாவட்டம் நெரூர் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வளர்மதி (50). இவர் அண்மையில் கரூர் ரயில் நிலையம் அருகேயுள்ள டீ கடையில் நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த 2 மர்ம நபர்கள் வளர்மதியிடமிருந்து செல்போன், ரூ.4,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து கரூர் நகர போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT