Regional01

மருத்துவ முகாம் எம்.பி. உறுதி :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 230 மோட்டார்கள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடம்பாகுளத்தில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு ள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி க்கு உட்பட்ட பகுதியில் உணவு தேவைப்படும் மக்களுக்கு உணவு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT