CalendarPg

69 ஆயிரம் இடங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் :

செய்திப்பிரிவு

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவ.1-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், நீக்கம் செய்யவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும், மாற்றங்கள் செய்யவும் வசதியாகநவ.27, 28-ம் தேதிகளில் (இன்று, நாளை) தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. www.nvsp.in என்ற இணையதளம், வாக்காளர் உதவி கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT