TNadu

வீரப்பன் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை :

செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மாதையனுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகும் அவரைவிடுதலை செய்ய தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல. 74 வயதான மாதையன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதை கருத்தில்கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT