Regional02

உதகையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. உதகை எட்டினஸ் சாலையில் ராட்சத கற்பூர மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததால், மின்கம்பங்களும் சேதமடைந்து, மின்சாரம்துண்டிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின், போக்குவரத்து சீரானது.

அறுந்து கிடந்த மின்கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் மாற்றினர். நேற்று காலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான காலநிலை யுடன் சாரல் மழை பெய்தது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குந்தாவில்73 மி.மீ. மழை பதிவானது. பாலகோலாவில் 64, அவலாஞ்சியில் 55, கோடநாட்டில் 42, கெத்தையில் 34, எமரால்டில் 33, பர்லியாறில் 30, கோத்தகிரியில் 29, குன்னூரில் 28.5, உதகையில் 24, அப்பர்பவானியில் 21, கேத்தியில் 21 மி.மீட்டர் மழை பதிவானது.

SCROLL FOR NEXT