வெம்பக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாசுத் தொழிலாளர்கள். 
Regional02

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் - சரவெடி தடையை நீக்கக்கோரி பட்டாசு தொழிலாளர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசுத் தொழிலாளர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட்டாசுத்தொழிலுக்கு சுற்றுச் சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், சரவெடி தடையை நீக்க வேண்டும், பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

சங்க நிர்வாகி கே.கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கே.முருகன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார். நிர் வாகிகள் எம்.சுந்தரபாண்டியன், முனியசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்டச் செயலாளர் எம்.மகாலெட்சுமி நிறைவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து முடிவில் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, அங்கு வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தன்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாசுத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கை மனுக்களை பட்டாசுத் தொழிலாளர்கள் அளித்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக வட்டாட்சியர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பட்டாசுத் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT