சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காந்தி சிலை அருகே காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: காலையில் தக்காளி விலையை விசாரித்தேன் ரூ.180 என்கின்றனர். இந்த அவல நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுதான் காரணம். உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தலில் விவசாயிகள் பாஜகவை விரட்டி அடிப்பார்கள் என்ற அச்சத்திலேயே வேளாண் சட்டங்களை மோடி வாபஸ் பெற்றுள்ளார். மக்கள் சக்தியால் கண்டிப்பாக இந்த சர்வாதிகார ஆட்சியை தோற்கடிக்க முடியும் என்ற உறுதியோடு காங்கிரஸ் செயல்படும், என்றார்.