மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி யில் உள்ள மொபைல்போன் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதில் குழந்தைகளுடன் பிரிந்து சென்ற தனது மனைவியை சேர்த்து வைக்கக் கோரி வலியுறுத்தினார். தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸார் அவரை இறங்கச் செய்தனர். விசாரணையில் அவர், வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கண்ணன் எனத் தெரிய வந்தது. பின்னர், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.