Regional04

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதுரை, திண்டுக்கல்லில் அதிமுகவினர் விருப்ப மனு :

செய்திப்பிரிவு

மதுரை, திண்டுக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் மனு அளித்தனர்.

திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமாரிடம் கட்சியினர் மனு அளித்தனர். ஐயப்பன் எம்எல்ஏ, மாநில ஜெ. பேரவை இணைச்செயலர் இளங்கோவன், துணைச் செயலா ளர்கள் வெற்றிவேல், தனராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா விருப்ப மனுக் களை பெற்றார்.

பெரியபுள்ளான் எம்எல்ஏ, இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு நேற்று முதல் விநியோகிக்கப்பட்டது.

கட்சியினரின் மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீனாட்சி அம்மன் கோயி லில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் தெற்கு வாசல் பள்ளி வாசல், கீழவெளி வீதி தூய மரியன்னை ஆலயம் ஆகிய வழிபாட்டு தலங்களில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் மதுரை பனகல் சாலையில் உள்ள மாநகர அதிமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவிடம், விருப்ப மனுக் களை நிர்வாகிகள் பெற்றனர். ஏராளமான நிர்வாகிகள் அந்த மனுக்களை நேற்றே பூர்த்தி செய்து வழங்கினர்

சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர் வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு படிவத்தை வழங்கி னார். வில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண் டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றனர்.

SCROLL FOR NEXT