Regional02

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்தி கேயன் முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் சீராளூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வழிகாட்டு நெறிமுறை களின் அடிப்படையில் உண்மை நிலையை ஆராயாமல், ஊழியர்களின் விளக்கத்தை கோராமல், தன்னிச்சையாக முடிவெடுத்து உதவிப் பொறியாளர் ஹேமலதா, பணிமேற்பார்வையாளர்கள் திருமாறன், செந்தில்குமார் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதையும், கணினி உதவியாளர் சாந்தி பணிநீக்கம் செய்யப்பட்டதையும் ஆட்சியர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அனைத்து நிலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT