TNadu

பொறியியல் மாணவர் சேர்க்கை - 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதி :

செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை முடிந்த நிலையில், காலியாக உள்ள இடங்களை, ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்ப அரசிடம் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அனுமதி கோரினார்.

இதையடுத்து, பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 2-வது கட்ட கலந்தாய்வு நடத்த அரசு அனுமதி அளிக்கிறது என்று உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் கலந்தாய்வுக்கு 1.50 லட்சம் இடங்கள் கிடைத்தன. முதல்கட்ட கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் நிரம்பின. காலியாக உள்ள 62 ஆயிரம் இடங்களை நிரப்ப விரைவில் 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT