Regional01

தொழிலாளர் கல்வி நிலையத்தில் : அமைச்சர் ஆய்வு :

செய்திப்பிரிவு

தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார். துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கல்வி நிலையத்தின் பிஏ தொழிலாளர் மேலாண்மை, எம்ஏ தொழிலாளர் மேலாண்மைக்கான வகுப்புகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கிருந்த மாணவர்களிடம், கல்வித்திறனை வளர்த்துக் கொள்வதுடன் ஒழுக்கம், பணிவு, அடக்கம் ஆகிய பண்புகளுடன் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் வழங்க கல்வி நிலையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வளாகத்தேர்வு மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் தயார்ப்படுத்த வேண்டும் என கல்வி நிலையத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

SCROLL FOR NEXT