Regional01

கவரிங் நகைகளை கொடுத்து - பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி : கணவன், மனைவி கைது

செய்திப்பிரிவு

மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந் தவர் புவனேசுவரி(32). இவ ரது உறவினர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு(35), அவரது மனைவி பிரியா(31). இவர்கள் அவசர தேவைக்காக புவனேசு வரியிடம் பணம் கேட்டனர். இதற் காக தங்களுடைய 1980 கிராம் நகைகளை புவனேசுவரியிடம் கொடுத்து, செப்டம்பர் 17 முதல் அக்.31-ம் தேதி வரை சிறுக, சிறுக ரூ.70 லட்சம் வாங்கினர். இந்நிலையில் அந்த நகைகளை சோதனை செய்தபோது, அது கவரிங் நகைகள் எனத் தெரிய வந்தது.

புவனேசுவரி புகாரின் பேரில் ஆனந்த் பாபு, அவரது மனைவி பிரியா ஆகியோரை தெப்பக்குளம் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT