Regional01

அரசின் வெள்ள நிவாரண பணியில் குளறுபடியால் விவசாயிகள் பாதிப்பு: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு :

செய்திப்பிரிவு

திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ திறந்து வைத்து கூறுகையில், முதல்வர் அறிவித்த நிவாரணம் விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை.

திமுக அரசின் வெள்ள நிவாரணப்பணி குளறுபடியாலும், குறைவான நிவாரண அறிவிப்பாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார். நிகழ்ச்சியில் ஐயப்பன் எம்எல்ஏ, அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலர் பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT