Regional01

மதுரையில் க்யூ பிரிவு போலீஸார் விசாரணை :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரை கடந்த 5 ஆண்டுகளாக காணவில்லை என அவரது தாயார் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில், கார்த்திக்குக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை க்யூ பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்திக் இருக்குமிடம் குறித்து துப்புத் துலக்க மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், கூடல் நகர், உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவர்கள், அவர்களது உறவினர்கள், அலுவலகங்களில் சென்னை, திருச்சி, சேலம் மாவட்ட க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT