எஸ்ஐ பாண்டியின் மனைவி வசந்தியிடம் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன். 
Regional02

கரோனா பாதிப்பால் உயிரிழந்த - எஸ்ஐயின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி :

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த எஸ்.ஐ.யின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சிறப்பு எஸ்ஐ பாண்டி. இவர், கடந்த ஆண்டு ஜூலை 20 -ம் தேதி கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை பாண்டியின் மனைவி வசந்தியிடம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வீ.பாஸ்கரன் நேற்று வழங்கினார்.

SCROLL FOR NEXT