Regional01

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை பயணம் தொடங்கிவைப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை பயணத்தை மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(நவ.25) முதல் டிச.4 வரை மொத்தம் 80 இடங்களில் தொடர்ந்து இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை பயணம் நிகழ்ச்சி நடத்தி, இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை) ஆர்.அறிவழகன், உதவி திட்ட அலுவலர் பொ.ராஜா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பி.ஜெகந்நாதன், கே.சண்முகம், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT