சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் மக்கள் விழிப்புணர்வு பிரச் சாரத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத். 
Regional02

காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட (வடக்கு) காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அதில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் எடுத்துரைத்து நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் பிரச்சாரம் செய்தார். இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பழகன், தசரதன், வட்டாரத் தலைவர் அன்புதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT