Regional04

தீபத்தை தரிசிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் வசிப்பவர் துரை(30). இவர், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிக்க நேற்று முன் தினம் சென்றுள்ளார். அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அப்போது மகா தீபத்தை ஏற்றிவிட்டு வந்தவர்கள், துரை உயிரிழந்து கிடப்பதை அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், கீழே கொண்டு வரப்பட்டது.

SCROLL FOR NEXT