செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிம்கென் அறக்கட்டளை நிதி உதவியுடன் ரூ.50 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு நேற்று ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் திறந்து வைத்தார்.
திறப்பு விழா முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்த அப்பகுதி மக்கள், "கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது ஊருக்கு பஸ் வசதி இல்லை. இதனால் அதிக செலவு செய்து தனியார் வாகனங்களில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே உடனடியாக செங்கல்பட்டில் இருந்து அஞ்சூர் வரை அரசு பஸ்ஸை இயக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.