Regional01

சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க ஓவியர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுவர் விளம்பரம் எழுத அனுமதி வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்க உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மாநில அமைப்புச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் சந்திரசேகரன், செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT