TNadu

கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் - கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த் :

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனை ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் கமல்ஹாசனை தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

சமக தலைவர் சரத்குமார், நடிகர்கள் பிரபு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், இயக்குநர்கள் எஸ்பி.முத்துராமன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT