Regional02

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏஇபிசி நன்றி :

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவரும், அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு தலைவருமான ஏ. சக்திவேல் நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘சக ஏற்றுமதிதொழில்துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து நல்ல ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மனமார்ந்தநன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சியை வளர்க்கும் விதத்தில் அதற்கென தனி வளர்ச்சி குழுமம் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அந்த வளர்ச்சி குழுமத்தில் தொழில் துறைக்கும் பங்களித்தமைக்காக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

தொழில்துறைக்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கம், திருப்பூர் ஆடை ஏற்றுமதித் துறையை மற்றுமொரு புதிய எழுச்சி மற்றும் வளர்ச்சியை அடையவைக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT