Regional02

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே அயனம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (70). விவசா யியான இவர் நேற்று நிலத் துக்கு சென்றார்.

அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியில் கால்பட்டு, மின்சாரம் பாய்ந்து நிகழ் விடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே சின்னக் கள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் மகன் பிரபு (38). விவசாயியான இவர்,தனது நிலத்துக்கு நேற்று மாலை சென்ற போது மின் மோட்டார் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் கால் வைத்தில் மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்தார்.

புதுச்சேரி, திருக்கனூர் காவல்நிலையம் பின்புறம் நாராயணசாமி நகர் சாலை சந்திப்பில், மரக்கிளைகளை அகற்றும் போது, அங்கு நின்றிருந்த கேபிள் ஆபரேட்டர் சேகர் (35) மீது மரக்கிளை விழுந்து உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT