Regional01

விதி மீறி ஆர்ப்பாட்டம் : 550 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மதுரையில் பாஜக இளைஞர் அணி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்டத் தலைவர் மருத்துவர் சரவணன் தலைமை வகித்தார்.

கரோனா தடுப்பு விதிமீறி அதிக அளவில் கூடி சமூக இடைவெளியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து தல்லாகுளம் சட்டம், ஒழுங்கு எஸ்.ஐ. புலிக்குட்டி அய்யனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீஸார் மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 150 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் ஜெய் பீம் திரைப்படத்துக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் பாம்பு, எலிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களும் கரோனா தடுப்பு விதிமீறி கூடியதாக தமிழ்நாடு பழங்குடி நாடோடி மக்கள் கூட்டமைப்பின் நிறுவனர் மகேசுவரி உட்பட 51 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT