Regional01

கல்வி உதவித்தொகை அவகாசம் நீட்டிப்பு :

செய்திப்பிரிவு

மத்திய, மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின் மாணவ - மாணவியர் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைக்கு 15.11.2021 வரை இருந்தது. தற்போது 30.11.2021 வரைவிண்ணப்பிக்கலாம் என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT