Regional01

கடையில் திருடிய 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த மாதம் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், உதிரிபாகங்கள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் தென்காசி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், தென்காசி மேல பாறையடி தெருவைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன்கள் மகாராஜன், அகிலாண்ட ஈஸ்வரன் ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, செல்போன்கள், உதிரிபாகங்களை மீட்டனர்.

SCROLL FOR NEXT