பாவூர்சத்திரம் அருகே உள்ள வெள்ளை பனையேறிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகள் ராஜேஸ்வரி (22). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், திரும்பி வரவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடினர். இந்நிலையில், நேற்று மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ராஜேஸ்வரி சடலமாக மிதந்துள்ளார். பாவூர்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.