போளூர் அருகே ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் அத்திமூர் – வடக்காடு சாலை சேதமடைந்துள்ளது. 
Regional02

போளூர் அருகே சாலை சேதம் :

செய்திப்பிரிவு

ஜவ்வாதுமலையில் பெய்த கனமழையால், மலையில் இருந்து உற்பத்தியாகும் செய்யாறு, கமண்டல நதி மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலையடிவாரத்தில் உள்ள போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் இருக்கும் சித்தேரி நிரம்பி பாசனக் கால்வாய் மூலமாக அதிகளவு உபரி நீர் வெளியேறுகிறது. இதன் எதிரொலியாக அத்திமூர் – வடக்காடு சாலை சேதமடைந்து துண்டிக்கப்பட்டது. இதனால் இரண்டு கிராமங்களுக்கும் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் இருந்து நெடுங்காவடி கிராமத்துக்கு செல்லும் தரைப் பாலம், கனமழைக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு கிராமங்களுக்கு இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT