TNadu

கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று : நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய பிறகு லேசான இருமல் இருந்தது. பரிசோதனையில் கரோனாதொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் சுகாஷ் பிரபாகர்நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கமல்ஹாசனுக்கு குறைந்த அளவிலான சுவாசப் பாதை தொற்று, காய்ச்சல் இருந்தது. கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவரை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர் நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT