கரூர், பல்லாவரம், எடப்பாடி உள்ளிட்ட 11 நகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா பிறப்பித்த உத்தரவு:
கரூர் நகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி, கோவையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற கல்விநிறுவனத்தின் இணை இயக்குநராகவும், பல்லாவரம் நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ், ஊட்டி நகராட்சி ஆணையராகவும், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமி,மறைமலைநகர் நகராட்சி ஆணையராகவும், அங்கிருந்த ஓ.ராஜாராம், கோவில்பட்டி நகராட்சிஆணையராகவும், திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக இருந்து தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர்.சந்திரா,ராமநாதபுரம் நகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் பி.ஏகராஜ், ராணிப்பேட்டைக்கும், அங்கு இருந்த கே.ஜெயராமராஜா திருப்பத்தூருக்கும், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பி.சத்தியநாதன், உடுமலைப்பேட்டைக்கும், எடப்பாடி நகராட்சி ஆணையர் இ.திருநாவுக்கரசு, குடியாத்தத்துக்கும், திருத்தங்கல் நகராட்சி ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் கடையநல்லூருக்கும், காங்கேயம் நகராட்சி ஆணையர் எம்.முத்துக்குமார், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.