Regional01

ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கக்கோரி சிஐடியு உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோடு அரசு போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு நாமக்கல் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.

14-வது ஊதியக் குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உரிய பணப்பலன்கள் இன்னும் கிடைக்கப் பெறாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நாமக்கல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க கிளைச் செயலாளர் அன்பழகன் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT