சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் நேற்று வழங்கியது.
சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மளிகைப் பொருட்கள், போர்வை, பாய் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் என்.ரமேஷ் வழங்கினார். இந்த அமைப்பு சார்பில் ஏற்கெனவே திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.கிம் கூறும்போது, "தமிழ்நாட்டுக்கு உதவுவதில் அக்கறை கொண்டுள்ளோம். தமிழக மக்கள் மீதான நன்மதிப்பின் வெளிப்பாடாக இந்த உதவியை செய்கிறோம்" என்றார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) டி.சினேகா, வடக்கு வட்டார துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.