Regional01

ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சுற்றுலா :

செய்திப்பிரிவு

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து ஷீரடி, மந்த்ராலயம் செல்ல ஐஆர்சிடிசி சார்பில் சிறப்பு ரயில் சுற்றுலா நடத்தப்படுகிறது.

டிசம்பர் 24-ம் தேதி மதுரையில் புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும். ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், சனி சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர், மந்த்ராலயத்தில் ராகவேந்திரரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 7 நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.7,060. இதில் ரயில் பயணக் கட்டணம், தங்கும் வசதி, வாகனப் போக்குவரத்து, சைவ உணவு அடங்கும். கூடுதல் விவரங்களுக்கு 9003140680, 8287932121 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT