Regional02

உடைந்த தரைப்பாலங்களை உடனடியாக சரி செய்திடுக : விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவு

செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பருவ மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணங்கள் வழங்குதல் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கூறியது:

மாவட்டத்தில் பல இடங்களில் உடைந்த தரைபாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் அமைத்து சாலைகள் போட வேண்டும். சரியான முறையில் பணிகள் செய்திருந்தால் மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு முதல் தவணை பணத்திற்கான காசோலையை வழங்க வேண்டும் என்றனர்.

இக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, விழுப்புரம் எம்பி ரவிக்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் புகழேந்தி , லட்சுமணன், சிவக்குமார்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT