Regional01

பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மத்தளம்பாறை அருகே குணராமநல்லூர், சாரல் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

‘குணராமநல்லூர் ஊராட்சியில் பசுமை வீடு, தொகுப்பு வீடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஏற்கெனவே வீடுகள் இருப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வீடு இல்லாத மக்கள் பயன் பெறும் வகையில் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT