பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். அடுத்த படம்: திருப்பத்தூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைசிப்படம்: திருவண்ணாமலை அறிவொளி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 
Regional02

திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இளைஞரணி மாநில துணைத் தலைவர்குமார் சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்டத் தலைவர் தசரதன், மகளிரணி மாவட்டத் தலைவி கிருஷ்ணகுமாரி, மாவட்டத் துணை தலைவர் ஜெகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து முழக்க மிட்டனர்.

திருப்பத்தூர்

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வித்யா வீரப்பன் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ராஜதமயந்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரங்கேஷ் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார். ஆர்ப் பாட்டத்தில், ‘பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி” முழக்க மிடப்பட்டது.

இதில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ் குமார், சேகர், ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT